மீன்வளத்துறைக்கு புதிய திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி....

இந்திய கிராமங்கள் 21 ஆம் நூற்றாண்டின் பலமாக மாற வேண்டும், என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
x
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் மீன்வளத்துறைக்கான புதிய திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் . பின்னர், கால்நடை பராமரிப்பை ஊக்குவிக்கும் வகையில் இ-கோபாலா செயலியை அவர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் நீலப்புரட்சி மற்றும் வெண்மை புரட்சியை ஏற்படுத்தவே,  மத்யஸ்த சம்படா யோஜானா திட்டம் துவக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டின் 21 மாநிலங்களில் இந்தத் திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம், இந்திய கிராமங்களை மேலும் வளப்படுத்தவும் பலப்படுத்தவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இனக்கலப்பு செய்யப்பட்ட கால்நடைகளுக்கு அவற்றின் விஞ்ஞான பூர்வமான தகவல்கள் மற்றும் அவற்றை எப்படி பராமரிப்பது போன்ற தகவல்கள் ஈ-கோபாலா செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்