திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காணொலி வாயிலாக திமுக பொதுக்குழு இன்று கூடியது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  சமூக இடைவெளியை கடைபிடித்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், பொதுச்செயலாளராக துரைமுருகன் , பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, ஸ்டாலின் அறிவித்தார். 

துணை பொதுச்செயலாளர் - ஆ.ராசா, பொன்முடி - பொதுக்குழுவில் ஸ்டாலின் அறிவிப்பு


 துணை பொதுச்செயலாளர் பதவி, கூடுதலாக முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பையும் ஸ்டாலின் வெளியிட்டார். ஏற்கனவே துணைப் பொதுச் செயலாளராக ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகிய மூவர் உள்ள நிலையில், மேலும் இருவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Next Story

மேலும் செய்திகள்