ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: "நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம்" - கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கருத்து

ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம் என கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கூறியுள்ளார்.
ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம் - கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கருத்து
x
விகாஸ் துபே வழக்கில், சட்டரீதியாக எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு உரிய பதில் உள்ளதாக,  வழக்கின் முக்கிய காவல்துறை அதிகாரியும், தமிழகத்தை சேர்ந்தவருமான கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கூறினார்.  விகாஸ் துபே கும்பல் இதற்கு முன்னர் காவல்நிலையத்தில் நுழைந்து அமைச்சரையே சுட்டுக் கொன்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.  போலீசாரின் துப்பாக்கியை பறித்ததுடன், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தப்பிக்க முயற்சி செய்ததால், போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளிப்பேன் என தெரிவித்தார். சட்டரீதியாக எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு உரிய பதில் உள்ளதாக தினேஷ்குமார் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்