15 நிமிடத்தில் நிறைவடைந்த அமைச்சரவை கூட்டம் - பட்ஜெட்-க்கு மத்திய அரசு அனுமதி கிடைக்காத எதிரொலி

புதுச்சேரியில் நிதித்துறை செயலர் வராததால்,15 நிமிடத்தில் அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தது.
15 நிமிடத்தில் நிறைவடைந்த அமைச்சரவை கூட்டம் - பட்ஜெட்-க்கு மத்திய அரசு அனுமதி கிடைக்காத எதிரொலி
x
புதுச்சேரியில் நிதித்துறை செயலர் வராததால்,15 நிமிடத்தில் அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தது. 10 ஆண்டுகளாக, மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டும், ஜூலையில் முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கம் போல், கடந்த மார்ச் மாதம் 2 ஆயிரத்து 42 கோடி ரூபாய்க்கு இடைக் கால பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், ஒன்பதாயிரத்து 500 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டது. அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கூடிய அமைச்சரவை கூட்டத்துக்கு அனைவரும் வந்தனர். ஆனால், நிதித்துறை செயலர் வரவில்லை. பின்னர், பட்ஜெட்-க்கு மத்திய அரசு அனுமதி கிடைக்காததால் அவர் வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து 15 நிமிடத்தில் அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. 



விகாஷ் தூபே என்கவுன்டர் விவகாரம் - உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை



விகாஷ் தூபே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் விகாஷ் துபேவால், துணைக் கண்காணிப்பாளர் உள்பட 8  போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட  சம்பவத்தை, உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை 
கான்பூர் அழைத்து வரும் வழியில், வாகனம் விபத்துக்கு உள்ளான போது விகாஷ் தூபே தப்பிக்க முயன்ற நிலையில், அவரை உத்தரப் பிரதேச போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்நிலையில், இந்த என்கவுன்டர் தொடர்பாகவும், 8 காவல்துறையினர் உயிரிழந்த விவகாத்தில் நியாயம் கிடைக்கவும், போலீசார், குற்றவாளிகள் இடையிலான தொடர்பு குறித்து கண்டறிய நேர்மையான , நியாயமான விசாரணை தேவை என்றும் மாயாவதி வலியுறுத்தி உள்ளார். அப்போது தான் குற்றச்செயல்கள் இல்லாத மாநிலமாக உத்தரப் பிரதேசத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தமது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார். 


கான்பூர் சம்பவம், விகாஷ் தூபே என்கவுன்டர் - உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை - காங்கிர​ஸ் கட்சி வலியுறுத்தல்


விகாஷ் தூபே சம்மந்தப்பட்ட கான்பூர் சம்பவம் தொடர்பாக, பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. விகாஷ் தூபே என்கவுன்டர் பல சந்தேகங்களை எழுப்புவதாகவும், இந்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறியவும், போலீசார் மற்றும் குற்றவாளிகளுக்கு இடையிலான தொடர்புகளை கண்டறிய இந்த நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தி உள்ளார். விகாஷ் தூபே போன்ற ரவுடிகளுக்கு இதுவரை அடைக்கலம்  அளித்து பாதுகாத்தது யார் என்றும், பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 


கொரோனா பாதித்த காவல் நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் - முக கவசம் அணியாமல் கொண்டாட்டத்தில் காவலர்கள்


கொரோனாவால் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூடப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு வடக்கு எல்லைக்குட்பட்ட எஸ்வந்த்பூர் காவல்நிலையத்தில் காவலாளியின் பிறந்தநாளை போலீசார் கேக் வெட்டி கொண்டாடி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அரசின் விதி முறைப்படி சீல் வைக்கப்பட வேண்டிய காவல் நிலையத்தில் முகமூடி கூட அணியாமல் நடைபெற்ற கொண்டாட்டம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


வீட்டில் இருந்து பணியாற்ற எடியூரப்பா முடிவு


வீட்டில் இருந்து பணியாற்றப் போவதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.


இரு சக்கர வாகனம் மீது மோதிய கார் - இடித்து விட்டு நிற்காமல் சென்றதால் பரபரப்பு 


மத்திய பிரதேச மாநிலம் ஹோசிகாபாத்தில் , இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது., விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநரை போலீசார் வலை வீசி தேடி வருகினறனர். 


பற்களுடன் பிறந்த குழந்தை - மக்கள் ஆச்சர்யம்


தெலுங்கானா மாநிலம், ஜோகுலாம்பா கத்வால் மாவட்டத்தில், பிறந்த குழந்தைக்கு பற்கள் காணப்பட்டதால் பெற்றோரும் மருத்துவர்களும் ஆச்சரியமடைந்தனர். குழந்தையை பார்க்க அதிகமானோர் ஆர்வம் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கத்வால் பகுதியை சேர்ந்த சுசரிதா என்ற பெண்ணிற்கு, இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பற்கள் இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் ஆச்சரியமடைந்ததுடன்,  ஹார்மோன் மற்றும் மரபணு சிக்கல்களால், இது போன்று நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தனர்

உலக பணக்காரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறும் முகேஷ் அம்பானி - வாரன் பஃபெட்டை பின்னுக்குத்தள்ளி 8 வது இடத்தில் முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, வாரன் பஃபெட்டைவிட அதிக சொத்து மதிப்பை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முகேஷ் அம்பானி 8 வது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், வாரன் பஃபெட் 9 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில், பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான தொண்டு நிறுவனத்துக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை வாரன் பஃபெட் நிதி உதவி வழங்கினார். இதையடுத்து, அவரது சொத்து மதிப்பு 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்தது. இந்த நிலையில், ஃபேஸ்புக், இண்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடு காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்