பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் குடியேறிய,ஏழைகளுக்கு வாடகை வீடுகள் கட்டித்தர திட்டம்- பிரகாஷ் ஜவடேகர்

இந்தாண்டு நவம்பர் மாதம் வரை 81 கோடி மக்களுக்கு, மேலும் 3 மாதத்திற்கு, இலவச அரிசி,பருப்பு, கோதுமை மற்றும், நகர்புறங்களில் குடியேறிய ஏழைகளுக்கு, வாடகை வீடுகள் கட்டித்தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ்  நகர்ப்புறங்களில்  குடியேறிய,ஏழைகளுக்கு வாடகை வீடுகள் கட்டித்தர திட்டம்- பிரகாஷ்  ஜவடேகர்
x
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,

பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், 81 கோடி மக்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி, கோதுமை மற்றும் பருப்பு, வரும் நவம்பர் மாதம் வரை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளார். பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ்  நகர்ப்புறங்களில் குடியேறிய ,ஏழைகளுக்கு வாடகை வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும் கூறினார். இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் வழங்கப்படும் என்றும்,
வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் ஊழியர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 24 சதவீத தொகையை அரசே செலுத்தும் திட்டமும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் 72 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்