ஏழைக் குடும்பத்தினருக்கு தலா ரூ. 7500 வழங்க ராகுல்காந்தி வலியுறுத்தல்

ஏழைக் குடும்பங்களுக்கு ஆறு மாதங்களுக்கு தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
ஏழைக் குடும்பத்தினருக்கு தலா ரூ. 7500 வழங்க ராகுல்காந்தி வலியுறுத்தல்
x
ஏழைக் குடும்பங்களுக்கு ஆறு மாதங்களுக்கு தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய மண்ணை எப்படி, எப்போது மீட்கப் போகிறீர்கள் என்பதை, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பொருளாதார சீர்குலைவை அனைவரும் அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, ஏழைகள், தொழிலாளர்கள், மாத ஊதிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதித்துள்ளதாக கூறியுள்ளார். நியாய் திட்டத்தை செயல்படுத்தி, ஏழைகளுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கலாம் என்ற ராகுல், பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்தீர்களே என்றும் வினவியுள்ளார்.    


Next Story

மேலும் செய்திகள்