"மதுவை மறந்தவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் : மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்" - ராமதாஸ்

ஊரடங்கு காரணமாக சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், மக்கள் மதுவை மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுவை மறந்தவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் : மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் - ராமதாஸ்
x
ஊரடங்கு காரணமாக சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், மக்கள் மதுவை  மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தபோதெல்லாம், மதுவுக்கு அடிமையானவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவர், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என அரசு கூறி வந்தது. ஆனால், கடந்த ஒரு மாதமாக அப்படியான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை என ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மதுவை மறந்தவர்கள், மகிழ்ச்சியுடன் உள்ளதாக தெரிவிப்பதாகவும், இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்றால் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்