கேரளாவில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு - மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்

கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
x
கேரளாவில் உணவகங்கள் முழுமையாக இயங்குவதற்கும், மாநிலத்திற்குள் பேருந்துகள் இயங்கவும் இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம், கேரள அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கொரோனா தடுப்பு நடவடிக்கையை நீர்த்து போகச் செய்யும் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்