கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் - பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் மெழுகுவர்த்தி, விளக்கு மற்றும் செல்போன் டார்ச்சுகளை ஒளிர விட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
x
கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஊரடங்கு உத்தரவை நாட்டு மக்கள் முறையாக கடைப்பிடித்து வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனாவிற்கு எதிரான போரில், உலக நாடுகளே இந்தியாவை பாராட்டி அதனை பின்பற்றி வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றிணைந்து செயலாற்ற முடியும் என்பதை நாட்டு மக்கள் நிரூபித்துள்ளதாகவும், அனைவரும் ஒன்றாக உள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். நிறைவாக, வருகிற ஞாயிற்றுக்கிழமை அதாவது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு, மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும், செல்போன் டார்ச்களை ஒளிர விட வேண்டும் என நாட்டு மக்களை பிரதமர் கேட்டு கொண்டார். இல்லத்தின் பால்கனியில் இருந்தபடி விளக்குகளை ஏற்ற வேண்டும் என்றும், அதே நேரம் சமூக விலகலை கடை பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்