ஜம்மு, காஷ்​மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்த விவகாரம்: "மக்களை அவமானப்படுத்தியதற்கு சமம்" - குலாம் நபி ஆசாத்

ஜம்மு, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தது, அம்மாநில மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றம்சாட்டி உள்ளார்.
ஜம்மு, காஷ்​மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்த விவகாரம்: மக்களை அவமானப்படுத்தியதற்கு சமம் - குலாம் நபி ஆசாத்
x
யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு, காஷ்​மீரை உடனடியாக மாநிலமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்ரீநகரில் பரூக் அ​ப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத் வலியுறுத்தி உள்ளார். ஜம்மு,காஷ்மீர் வளர்ச்சி அடைவதாக கூறும் நிலையில், வீட்டு சிறையில் உள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், காஷ்மீரில முறையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 7 மாதங்களுக்கு பின்னர் பரூக் அப்துல்லாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும், எதற்காக அவரை மத்திய அரசு சிறை வைத்தது என்ற காரணம் மட்டும் தான் தமக்கு இதுவரை புரியாத ஒன்றாக உள்ளது எனவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்