ரஜினி அரசியல் பிரவேசம் - இன்று அறிவிப்பு..?மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ரஜினி ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது
ரஜினி அரசியல் பிரவேசம் - இன்று அறிவிப்பு..?மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ரஜினி ஆலோசனை
x
சென்னையில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினிகாந்த், இன்று ஆலோசனை நடத்துகிறார். அதனை தொடர்ந்து காலை பத்து 30 மணி அளவில், பொது அரங்கில் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த செய்தியாளர் சந்திப்பில், கட்சி தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக ரஜினி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனையில், கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை விரைவில் ஊடகங்கள் முன்பு வெளியிடுவேன் என, மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் ரஜினி கூறியிருந்த நிலையில், இன்று நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்