டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை
x
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக  பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே மும்முனைப்போட்டி நிலவியது. இந்த தேர்தலில் மொத்தம் 62 புள்ளி 59 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிகளில் 2 ஆயிரத்து 600 பணியாளர்களை தேர்தல் ஆணையம்  ஈடுபடுத்தியுள்ளது.  தேர்தல் முடிவுகளை உடனுக்குடன்  இணையதளத்திலும்,  Voter helpline என்ற கூகுள் ஆண்ட்ராய்டு செயலி மற்றும் ஆப்பிள் ஸ்டோர் செயலிலும்  வெளியிட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்