"தாஜ்மகாலை கூட பிரதமர் மோடி விற்று விடுவார்" - ராகுல் காந்தி கடும் தாக்கு

தாஜ்மகாலை கூட பிரதமர் மோடி விற்று விடுவார் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
தாஜ்மகாலை கூட  பிரதமர் மோடி விற்று விடுவார் - ராகுல் காந்தி கடும் தாக்கு
x
டெல்லி ஜங்க்புரா பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மேக் இன் இந்தியா என்ற  திட்டத்தை கொண்டு வந்த மோடி, நாட்டில் ஒரு தொழிற்சாலையை கூட அமைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். மாறாய், நாட்டில் உள்ள நிறுவனங்களை  ஒன்றாக பாஜக விற்பனை செய்து வருவதாகவும், விரைவில் செங்கோட்டையையும், தாஜ்மகாலையும் கூட மோடி விற்றுவிடுவார் என தெரிவித்தார். நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர பாஜக அரசு தவறிவிட்டதாகவும், அது தொடர்பாக, தாம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க ம‌த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயப்பட கூடாது என அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்