"தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் எந்த திட்டமும் இல்லை" - உள்துறை அமைச்சகம் விளக்கம்

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் எந்த திட்டமும் இல்லை - உள்துறை அமைச்சகம் விளக்கம்
x
தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்த கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இதனை மக்களிடம் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவே அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்