"விரைவில் சிட்னி நகரைப் போல் மதுரை மாறும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை வைகை ஆற்றில், ஒருசொட்டு கழிவுநீர் கூட கலக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
விரைவில் சிட்னி நகரைப் போல் மதுரை மாறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
மதுரை வைகை ஆற்றில், ஒருசொட்டு கழிவுநீர் கூட கலக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வைகையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருந்து தூய்மைப் பணிகளை துவக்கி வைத்த அவர், சீர்மிகு மதுரை என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். பாலங்களின் கட்டுமானம் மற்றும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இரண்டும் நிறைவுபெற்றவுடன், போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும் என செல்லூர் ராஜூ கூறினார்.  இந்தப் பணி, வரும் டிசம்பருக்குள் முடிவடையும் என்று கூறி,  'ஸ்மார்ட் சிட்டி மதுரை' எனும் செயலியையும் துவக்கி வைத்த அவர், மதுரை சிட்னி நகராக மாறும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்