"ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை"

கோவில்பட்டியில் ஒன்றிய தலைவருக்காக நடந்த மறைமுக தேர்தலில் அதிக உறுப்பினர்களுடன் திமுக இருந்த நிலையில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது
ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில், திமுக கூட்டணி 8 உறுப்பினர்கள், அதிமுக கூட்டணியில் 6 உறுப்பினர்கள் உள்ளனர்.

திமுகவில் இருந்து அதிமுக பக்கம் சென்ற விசிக உறுப்பினரை சேர்ர்த்து சுயேட்சை உறுப்பினர்களின் எண்ணிக்கை 5.

சுயேட்சை உறுப்பினர்களில் 2 பேர் திமுகவுக்கும், 3 பேர் அதிமுகவுக்கும் ஆதரவு என சொல்லப்படுகிறது. 

இதன் படி திமுகவிற்கு 10 உறுப்பினர்களும், அதிமுகவிற்கு 9 உறுப்பினர்களும் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10 உறுப்பினர்களை திமுக வைத்திருந்த நிலையில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது எப்படி என கேள்வி எழுந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த திமுக எம்.பி. கனிமொழி, வாக்குப்பதிவு நடந்த அலுவலகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 5 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்திய அவர், தேர்தல் அலுவலருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்