ஆளுநரை திரும்ப பெறக் கோரி முழக்கம் - பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளி

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ஆளுநரை திரும்ப பெறக் கோரி முழக்கம் - பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளி
x
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். கேரள சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. அப்போது, சி.ஏ.ஏ., என்.ஆர்.சிக்கு எதிரான கேரள அரசின் தீர்மானங்களை அவமதிக்கும் வகையில், ஆளுநர் நடந்து கொள்வதாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டினார். இதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாத ஆளுநர் ஆரிப் முகமது கான் சட்டப்பேரவையில் உரையாற்றினார். இதை புறக்கணித்து, வெளிநடப்பு செய்த காங்கிரஸ் உறுப்பினர்கள், சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்