"புள்ளி விவரங்கள் - ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்" - அமைச்சர் உதயகுமார்

"பாரத்நெட் டெண்டரில் ஊழல் என்பது அடிப்படை ஆதாரமற்ற புகார்"
புள்ளி விவரங்கள் - ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் - அமைச்சர் உதயகுமார்
x
பாரத்நெட் உள்கட்டமைப்பு திட்ட டெண்டரில் முறைகேடு என அடிப்படை ஆதாரம் இல்லாத பொய் குற்றச்சாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் குறை கூறி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு பணியிட மாற்றத்திற்கு, உள்நோக்கம் கற்பித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளது ஆச்சரியமளிப்பதாக,  தெரிவித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது, எல்லா ஆட்சியிலும் நடக்கும் நிகழ்வு என்று அவர்  விளக்கம் அளித்துள்ளார்.பாரத்நெட் உள்கட்டமைப்பு திட்ட டெண்டரில் முறைகேடு என அடிப்படை ஆதாரம் இல்லாத பொய் குற்றச்சாட்டை ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் உதயகுமார், இதற்காக தற்போது தான் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளியோ, விலைப்புள்ளியோ பெறப்படாத நிலையில், ஸ்டாலினின் குற்றச்சாட்டு, விந்தையாக உள்ளதாகவும், அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நல் ஆளுமை விருது தமிழகத்திற்கு கிடைத்த நிலையில், இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி, தேசிய குற்ற ஆவண காப்பகம் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கிய புள்ளி விவரங்கள் தவறா   என்று ஸ்டாலினுக்கு அவர் கேள்வி  எழுப்பி உள்ளா

Next Story

மேலும் செய்திகள்