டெல்லியில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரசாரம் - பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எங்கே?

டெல்லியில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இதுவரை மூத்த அரசியல்வாதிகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தாமல் அமைதி காத்துவருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
டெல்லியில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரசாரம் - பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எங்கே?
x
ஆம் ஆத்மி கட்சியில் கட்சியில் முதலமைச்சர் வேட்பாளராக கெஜ்ரிவாலை முன் நிறுத்தி  தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கவில்லை என்றபோதிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். சுயேட்சை கட்சிகளும் தங்கள் பங்குக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 
ஆனால் காங்கிரசை பொறுத்தவரை குறிப்பிடும்படியான மூத்த தலைவர்கள் யாரும் இன்னும் டெல்லியில் பிரசாரத்தை தொடங்கவில்லை

மறைந்த முதலமைச்சர் ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி டெல்லியை ஆட்சி செய்து வந்த‌து. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வருகையால் ஆட்சியை இழந்த காங்கிரசால்,  அதன் பிறகு தற்போது வரை டெல்லியில் ஆட்சியை காங்கிரஸால் பிடிக்க முடியவில்லை.
கடந்த 2013ஆம் தேர்தலில் 8 தொகுதியில் வென்ற காங்கிரஸ் கட்சியால்,  2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு இடம்கூட வெற்றி பெற முடியவில்லை...

அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, அதற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டது அனைவரும் அறிந்த‌தே....கட்சி தலைவர் இல்லாத‌தால், 3 செயல் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகின்றனர். நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது வரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் யாரும் பிரச்சாரத்தில் களமிறங்கவில்லை. காங்கிரஸ் கட்சி பதுங்குவது பாய்வதற்கு தான் என அக்கட்சியினர் தங்களை சமரசம் செய்து கொண்டாலும், தாமதமான அந்த பாய்ச்சல் எவ்வளவு தூரம் வெற்றிப்பாதையில் செல்லும் என்ற கேள்விக்குறியும் எழுகிறது.... 

Next Story

மேலும் செய்திகள்