பாஜக தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஜே.பி. நட்டா

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஜே.பி. நட்டா
x
பாஜக தலைவராக பதவி வகித்து வந்த அமித் ஷா பிரதமர் மோடி தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சரானார். ஆனாலும் அவர் கட்சி பதவியில் தொடர்ந்தார். அவருக்கு உதவியாக செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அதில் ஜே..பி நட்டா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பாஜக புதிய தலைவரை தேர்வு செய்தவற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் .ஜே.பி.நட்டா சார்பில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது வேட்புமனுவை உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் பாஜக தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரவிசங்கர் பிரசாத், மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்