பா.ஜ.க தேசிய தலைவர் தேர்தல் - வேட்பு மனு தாக்கல் செய்தார், ஜே.பி. நட்டா

பாஜகவின் 11-வது தேசிய தலைவர் யார் என்பது குறித்து இன்று பிற்பகல் அறிவிக்கப்பட உள்ளது.
x
தற்போது பாஜகவின் தலைவராக இருக்கும் அமித்ஷாவின் பதவிக்காலம் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலை, பாஜக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, பாஜகவின் தேசிய செயல் தலைவராக கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட ஜே.பி.நட்டா சார்பில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நட்டாவின் வேட்புமனுவை உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். கட்சியின் மூத்த தலைவர்கள் நட்டாவின் வேட்புமனுவை வழிமொழிந்தனர். இந்நிலையில், பாஜகவின் புதிய தேசிய தலைவராக நட்டா போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்