குடியுரிமை திருத்தச் சட்டம்: "மோடி அரசின் நடவடிக்கை மோசமானது" - ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.

இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை என்ற நிலையை, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உருவாக்கி வருகிறது என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குற்றம்சாட்டி உள்ளார்.
x
இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை என்ற நிலையை, நரேந்திர மோடி  தலைமையிலான பா.ஜ.க. அரசு உருவாக்கி வருகிறது என தி.மு.க. எம்.பி.  ஆ.ராசா குற்றம்சாட்டி உள்ளார். நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், நாட்டின் இறையாண்மைக்கும் எந்த காலத்திலும் பாதுகாப்பாக இருக்கும் இயக்கம் தி.மு.க. தான் என்று தெரிவித்தார். மதவாதத்தை திணிக்கும் மற்றும் அதற்கு துணை போகும் அரசையும் அகற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என ஆ.ராசா அழைப்பு விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்