வரும் 6ம் தேதி சபரிமலை செல்கிறார், குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், வருகையையொட்டி, சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வரும் 6ம் தேதி சபரிமலை செல்கிறார், குடியரசு தலைவர்
x
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை கடந்த 30ஆம் தேதி திறக்கப்பட்டது. வரும் 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 6ம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்யவுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து தேவசம் போர்டுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, குடியரசுத் தலைவர் வருகைக்காக, சபரிமலை சன்னிதானம் பகுதியில் ஹெலிபேட்  அமைக்கவும், மாற்று  ஏற்பாடாக ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல்லில் இறங்கி, சாலை மார்க்கமாக பம்பை சென்று, அங்கிருந்து சபரிமலை செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்