"சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு" - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

குடியுரிமை தொடர்பான சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், கேரளா உள்பட எந்த சட்டப்பேரவைக்கும் அதிகாரம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
x
கேரள சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தால் மட்டுமே அமல்படுத்தக்கூடிய துறை ரீதியான 100 சட்டங்கள் கொண்ட பட்டியலில் 17வது சட்டமாக குடியுரிமை சட்டம் உள்ளதாகவும், அது தொடர்பான சட்டங்களை கேரளா உள்பட எந்த சட்டப்பேரவைக்கும் செயல்படுத்த அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றமே முதன்மை அதிகாரம் படைத்தது என்றும், அதனால் கேரள முதல்வர் உடனடியாக நல்ல சட்ட ஆலோசனை பெற வேண்டும் என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்