ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு : ராகுல்காந்தி, மம்தா, ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு : ராகுல்காந்தி, மம்தா, ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு
x
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக தனியாக போட்டியிட்டு, 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றன. இதில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைத்தது. இதை தொடர்ந்து சுயேச்சை உட்பட மற்ற கட்சிகளின் ஆதரவோடு, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதையடுத்து, தலைநகர் ராஞ்சியில், புதிய முதலமைச்சராக ஹேமந்த் சோரனுக்கு,  ஆளுநர் திரவுபதி முர்மு, பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், ராகுல்காந்தி, மமதா பானர்ஜி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும்  டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்