"அதிமுக - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம்"

கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.
அதிமுக - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம்
x
கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். அப்போது அங்கு வந்த அதிமுகவினர், வழியில் நின்றுகொண்டிருந்த திமுகவின் பிரச்சார வேனை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கூறியதாக தெரிகிறது. அப்புறப்படுத்தவில்லை என்றால் பட்டாசு வைத்து வேனை கொளுத்துவோம் என்று கூறி தொண்டர் ஒருவர்,  திமுகவின் பிரசார வேன் மீது பட்டாசு வைத்து வெடிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திமுக-அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்