"தேவைப்பட்டால் குடியுரிமை சட்டத்தில் திருத்தம்" - மேகாலயா முதல்வரிடம் அமித்ஷா வாக்குறுதி

தேவைப்பட்டால், குடியுரிமை சட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்வதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி அளித்தார்.
தேவைப்பட்டால் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் - மேகாலயா முதல்வரிடம் அமித்ஷா வாக்குறுதி
x
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுக்கும் அதே சமயத்தில், வடகிழக்கு மாநிலங்களில், போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இந்நிலையில், மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்மா, அமைச்சர்கள் குழுவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சட்டத்தில் இருந்து மேகாலயா மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் சங்மா வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக அந்த மாநில முதலமைச்சரிடம் அமித்ஷா உறுதி அளித்தார். மேலும், மேகாலயா பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, ஜார்க்காண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த பா.ஜ.க பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களின் கவலையை போக்கும் வகையில், தேவைப்பட்டால் குடியுரிமை சட்டத்தில் இன்னும் சில மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்