"கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை" - மத்திய அரசுக்கு திமுக எம்.பி. ஆ.ராசா கோரிக்கை

கோவையில் இருந்து துபாய், கோலாலம்பூர், பாங்காக் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமான சேவை துவங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, திமுக உறுப்பினர் ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை - மத்திய அரசுக்கு திமுக எம்.பி. ஆ.ராசா கோரிக்கை
x
கோவையில் இருந்து துபாய், கோலாலம்பூர், பாங்காக் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமான சேவை துவங்க வேண்டும் என மத்திய அரசுக்கு,  திமுக உறுப்பினர் ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் இது குறித்து பேசிய அவர், ஃபிளைங் துபாய் என்ற நிறுவனம் 2008ஆம் ஆண்டு, கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவையை துவங்க முன் வந்த நிலையில், அந்நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை  எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்த நேரடி விமான சேவைகள் கோவை வளர்ச்சிக்கு உதவும் என்று குறிப்பிட்ட ஆ.ராசா, இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்