"தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்" - மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்
பதிவு : டிசம்பர் 04, 2019, 02:34 PM
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில், ம.தி.மு.க. உறுப்பினர் வைகோ கோரியுள்ளார்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில், ம.தி.மு.க. உறுப்பினர் வைகோ கோரியுள்ளார். ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகம்  உயர்நீதிமன்றங்களைப் போல  மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தி உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற அமைப்பு இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை ஏற்கனவே நிறைவேற்றி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீதிமன்ற மொழியாக ஆங்கிலத்தை தவிர ஹிந்தியும் இருப்பதைப் போல்,  தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளையும் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் அப்போது, மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்தார்.

பிற செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு - அசாமில் போராட்டம் தீவிரம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமின் பல்வேறு பகுதியிகளில், போராட்டம் வெடித்து வருகிறது.

16 views

உணவு தேடி ஊருக்குள் செல்ல முயற்சிக்கும் யானை

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தின் பத்ரா வனப்பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று, ஊருக்குள் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

8 views

"மனிதர்களே கழிவுகளை அகற்றுவது வெட்கக் கேடானது" - தி.மு.க. எம்.பி. கனிமொழி

ரயில்வே பாதைகளை சுத்தம் செய்யும் பணியை ரயில்வே அமைச்சகம் மனிதர்களை தொடர்ந்து பயன்படுத்துவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

31 views

"மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோரை நீக்கிய குடியுரிமை திருத்த மசோதாவை வங்க கடலில் தூக்கி எரியுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

119 views

பல்கலை.க்குள் நுழைந்த பா.ஜ.க.வினரால் பரபரப்பு

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

45 views

தெலங்கானா - மகாராஷ்டிரா எம்.பி.க்கள், ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்க கோரிக்கை

ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு வழங்க கோரி தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.