"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம் - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து
x
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மக்களவையில் இதுதொடர்பாக பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர், இதனை தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும்,  இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க,  ஒட்டுமொத்த அவையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில், கடுமையான சட்டத்தை கொண்டு வர  அரசு தயாராக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.Next Story

மேலும் செய்திகள்