"ஒரே நாடு ஒரே மொழி நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை" - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
'ஒரே நாடு ஒரே மொழி' என்று நடைமுறைப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
'ஒரே நாடு ஒரே மொழி' என்று நடைமுறைப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், செம்மொழி தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், சிந்தி, உருது உள்ளிட்ட மொழிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் சுமார் 425 கோடியே 25 லட்ச ரூபாய், ஒதுக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Next Story