ஜார்கண்ட் தேர்தல் - பாஜக, காங். வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜகவும் காங்கிரசும் வெளியிட்டுள்ளது
ஜார்கண்ட் தேர்தல் - பாஜக, காங். வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
ஜார்கண்டில் நவம்பர் 30ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில்  52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபார் தாஸ் ஜம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதேப்போல ஜார்கண்ட் பாஜக தலைவர் லக்ஸ்மண் கிலுவா சக்ரதார்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதும் தெரிய வந்துள்ளது.  இதுபோல ஜார்கண்ட் தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி லோஹர்டாகா சட்டமன்றத் தொகுதியில் ராமேஸ்வர் ஓரானும் மாணிக்கா தொகுதியில் ராமச்சந்திர சிங்-கும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல தால்தன்கோஞ்ச் தொகுதியில் கே என் திரிபாதியும், பிஷ்ராம்பூர் தொகுதியில் சந்திரசேகர் துபே வும், பவந்த்பூர் தொகுதியில் கே.பி. யாதவ் வும் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்