பாஜக - சிவசேனா சேர்ந்து ஆட்சி அமைக்குமா?

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ள நிலையில், ​தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக - சிவசேனா சேர்ந்து ஆட்சி அமைக்குமா?
x
மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த முடிவை சிவசேனா வரவேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, பாஜக உடன் சிவசேனா கட்சி மீண்டும் கூட்டணி சேரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் மும்பையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக், பாஜக சிவசேனா கூட்டணி அரசு அமைந்தால் தாங்கள் எதிர்கட்சி வரிசையில் அமர்வோம் எனவும் இல்லையெனில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து  மாற்று அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபடும் என்றும் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்