"போராட்டத்தை தவிருங்கள்" : மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்க்குமாறு, திமுக தொண்டர்களுக்கு, ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
போராட்டத்தை தவிருங்கள் : மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
x
அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்க்குமாறு, திமுக தொண்டர்களுக்கு, ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அரசியல் லாப நோக்கில், திருத்தி எழுத அமைச்சர் பாண்டியராஜன் நினைப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இதுபோன்ற எத்தனையோ இழிமொழிகளையும் அவமானங்களையும் சுமந்து தான், திமுக  தலை நிமிர்ந்து, நிற்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நடத்தி வரும் எதிர்ப்பு போராட்டங்களை தவிர்க்க வேண்டும் என தொண்டர்களை,  ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்