சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு
x
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம்,  உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி,  டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், குடல் அழற்சி நோய் இருப்பதால் தனித்துவமான சிகிச்சை தேவைப்படுவதாக வாதிட்டார். உடல் நலக்குறைவால் சிதம்பரத்தின் உடல் எடையானது எழுபத்தி மூன்றரை கிலோவிலிருந்து தற்போது 66 கிலோவாக குறைந்துள்ளதாக கபில்சிபல் குறிப்பிட்டார். சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்ல சிதம்பரத்திற்கு  நீதிமன்றம் 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கபில் சிபல் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுரேஷ்குமார் கெயிட், எய்ம்ஸில் சிகிச்சை பெறுவதில் என்ன பிரச்சினை உள்ளது என்று  கேள்வி எழுப்பினார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கைதிகளும் தினசரி ஒவ்வொரு நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்த நீதிபதி, அவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எய்ம்ஸ் மருத்துவருடன் குடும்ப மருத்துவரும் இணைந்து  சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிக்கலாம் என்று கூறி சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்