பட்டினி நாடுகள் குறியீடு : "112-வது இடத்தில் இந்தியா" - ப.சிதம்பரம் தகவல்

பட்டினி நாடுகள் குறித்த குறியீட்டில் 117 நாடுகளில் இந்தியா 112-வது இடத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பட்டினி நாடுகள் குறியீடு : 112-வது இடத்தில் இந்தியா - ப.சிதம்பரம் தகவல்
x
பட்டினி நாடுகள் குறித்த குறியீட்டில் 117 நாடுகளில் இந்தியா 112-வது இடத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டியுள்ள, சிதம்பரம், மத்திய அரசு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாக தெரியவில்லை என்றும், இதனை மத்திய அரசு  உணரும் வரை நாள்தோறும் இரு பொருளாதார குறியீடுகளை பதிவிடுவேன் என தெரிவித்துள்ளார். அதன் படி தற்போது வெளியிட்டுள்ள பதிவில், பட்டினி நாடுகள் குறித்த குறியீட்டில் 117 நாடுகளில் இந்தியா 112-வது இடத்தில் உள்ளதாகவும், இதன் அர்த்தம் நாட்டில் தீவிரமான பசியோடு அதிக மக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல் நகர் மற்றும் கிராமப்புறங்களில் தனிமனித நுகர்வு செலவு குறைந்து விட்டதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமது குடும்பத்தினர் வாயிலாக இந்த பதிவை சிதம்பரம் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்