டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் - முன்னாள் பாஜக எம்.பி.

டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் -  முன்னாள் பாஜக  எம்.பி.
x
டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக  எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்லியில் உள்ள, பெரோஸ்ஷா சாலைக்கு ராஜேந்திர சோழன் பெயரை வைக்க  வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில், நாடாளுமன்றம், இந்தியா கேட், செங்கோட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு இடத்தில் ராஜேந்திர சோழனின் சிலையை அமைக்க, டெல்லி மாநகராட்சி அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சிவபெருமானிடம்  ராஜேந்திர சோழன் ஆசீர்வாதம் வாங்குவதை போல உள்ள சிலையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், மிகப்பெரிய கடற்படை வீரரான,  ராஜேந்திர சோழன், தன்னை பெருமைப்படுத்தி கொள்வது போல் எந்த ஒரு சிலையையும் அமைத்துக்கொள்ள வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்