பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம் : அக். 3 -ல் நேரில் ஆஜர் ஆக ராகுல்காந்திக்கு சம்மன்

பிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்தி வருகிற அக்டோபர் 3 ம் தேதி நேரில் ஆஜராக, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம் : அக். 3 -ல் நேரில் ஆஜர் ஆக ராகுல்காந்திக்கு சம்மன்
x
பிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்தி வருகிற அக்டோபர் 3 ம் தேதி நேரில் ஆஜராக, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20 ம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் உரையாற்றிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக நிர்வாகி மகேஷ் ஸ்ரீ மால் என்பவர் தொடர்ந்த வழக்கு, மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 3 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்