"உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
x
உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளம், காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இவ்வாறு தெரிவித்தார். மேலும், நாம் வரலாற்றை திரும்பி பார்த்தால், ராமர் பாலத்தை நமது பொறியாளர்கள் கட்டினார்கள் என்பது நினைவுக்கு வருகிறது என்றும், இதனால் ராமர் பாலம் போன்ற கலாசார சின்னங்கள் குறித்து இளம் பொறியாளர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்