மக்களவையில் 370-வது பிரிவை நீக்குவது தொடர்பான விவாதம் - பிரதமர் மோடி, சோனியா தனித்தனியே முக்கிய ஆலோசனை

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மக்களவையில் 370-வது பிரிவை நீக்குவது தொடர்பான விவாதம் - பிரதமர் மோடி, சோனியா தனித்தனியே முக்கிய ஆலோசனை
x
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நரேந்திர சிங் தோமர்  உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்த கொண்டனர். ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே காஷ்மீர் விவகாரம் சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி,  மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்