வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை வெற்றிபெறச் செய்க - ஈபிஎஸ், ஓபிஎஸ் வேண்டுகோள்

வேலூர் தேர்தலில் ஏ.சி. சண்முகத்தை வெற்றி பெறச் செய்யுமாறு, அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை வெற்றிபெறச் செய்க - ஈபிஎஸ், ஓபிஎஸ் வேண்டுகோள்
x
வேலூர் தேர்தலில் ஏ.சி. சண்முகத்தை வெற்றி பெறச் செய்யுமாறு, அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய்யான வாக்குறுதியை சொல்லி, நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று விட்டதாக குறைகூறி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பத்தை தலைமை இடமாக கொண்டு புதிய வட்டம், கவசம்பட்டில் பாலாற்றின் குறுக்கே தரை தடுப்பணை, குடியாத்தத்தில் புறவழிச்சாலை போன்ற பல திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் சாதி, மத பாகுபாடின்றி "எல்லோருக்கும் இங்கே உண்டு சமநீதி, யாருக்கும் இல்லை இங்கே அநீதி" என்ற உறுதியான கொள்கையோடு, அதிமுக செயல்பட்டு வருவதாகவும் அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்