"ஜெயலலிதா மரணம் : குற்றவாளிகளை, அடையாளம் காட்டுவோம்" - தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மீண்டும் அதிரடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மங்களை, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வெளிப்படுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் உறுதி அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் : குற்றவாளிகளை, அடையாளம் காட்டுவோம் - தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மீண்டும் அதிரடி
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மங்களை, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வெளிப்படுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் உறுதி அளித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கமலாபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்ற படி பேசிய அவர், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் இதுவரை ஆஜர் ஆகாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

" தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் அல்ல நாங்கள்"

தேர்தலுக்காக மட்டும் வந்து செல்பவர்கள் அல்ல நாங்கள் என குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், வேலூர் தொகுதியில் தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார். கருணாநிதியை அவமானப்படுத்துவதாக நினைத்து, அப்துல் கலாமை ஓ. பன்னீர் செல்வம் கொச்சை படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியது உண்மை என்றால், நிரூபிக்க வேண்டும் - இல்லை யென்றால், அரசியலை விட்டு விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உண்மையை ஓ. பன்னீர் செல்வம் நிரூபிக்கா விட்டால், நீதிமன்றம் செல்வோம் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்