டாக்டர் கலாம், குடியரசு தலைவர் ஆக திமுகவே காரணம் : ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் பதில்

குடியரசு தலைவர் பதவிக்கு, டாக்டர் அப்துல்கலாம் பெயரை முன்மொழிந்தது, திமுக என்று, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
டாக்டர் கலாம், குடியரசு தலைவர் ஆக திமுகவே காரணம் : ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் பதில்
x
குடியரசு தலைவர் பதவிக்கு, டாக்டர் அப்துல்கலாம் பெயரை முன்மொழிந்தது, திமுக என்று, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தத்தில் பிரசாரம் செய்த அவர், குடியரசு தலைவர் பதவிக்கு அப்துல் கலாமை வர விடாமல் கருணாநிதி தடுத்ததாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியிருந்ததற்கு பதிலடி கொடுத்தார்.வரலாற்றை ஓ. பன்னீர் செல்வம் திரிப்பதாக மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். 

இதனிடையே, வேலூர் தொகுதியில், கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்த தேர்தல் பிரசாரம், நாளை, சனிக்கிழமை மாலையுடன் ஓய்கிறது.  வருகிற 5 - ம் தேதி, வேலூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும். வேலூர் தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு? என்பது, வருகிற 9 - ம் தேதி, வாக்கு எண்ணிக்கையின் போது தெரிய வரும்.

Next Story

மேலும் செய்திகள்