எடியூரப்பா அமைச்சரவை வெள்ளிக்கிழமை விரிவாக்கம் : அமைச்சர் பதவியை பிடிக்க, மூத்த எம்.எல்.ஏக்கள் கடும் போட்டி

கர்நாடகாவில் மீண்டும் முதலமைச்சர் பதவியை பிடித்த எடியூரப்பா, தமது அமைச்சரவையை வரும் வெள்ளிக்கிழமை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளார்.
எடியூரப்பா அமைச்சரவை வெள்ளிக்கிழமை விரிவாக்கம் : அமைச்சர் பதவியை பிடிக்க, மூத்த எம்.எல்.ஏக்கள் கடும் போட்டி
x
கர்நாடகாவில் மீண்டும் முதலமைச்சர் பதவியை பிடித்த எடியூரப்பா, தமது அமைச்சரவையை வரும் வெள்ளிக்கிழமை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளார். முன்னதாக, வியாழக்கிழமை, எடியூரப்பா டெல்லி சென்று, பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்கிறார். அப்போது, கர்நாடக அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பதவியை பிடிக்க, மூத்த எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது. அதேநேரம், கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க, பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதால், பழமையும், புதுமையும் கலந்த அமைச்சரவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்