கர்நாடகா : காங்.,ம.ஜ.த கட்சிகளின் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்

கர்நாடகாவில், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், நாளை சட்டப் பேரவையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.
x
கர்நாடகாவில், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், நாளை சட்டப் பேரவையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 பேர் என எம்.எல்.ஏக்கள் 14 பேரை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வருகிற 2023ம் ஆண்டு மே 15 ந்தேதி வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுயேட்சை உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இதன் படி,  சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

 "முந்தைய அரசியல்வாதிகளை போல் இப்போது இல்லை" -  ரமேஷ்குமார்

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் கே.ஆர். ரமேஷ்குமார், முந்தைய அரசியல்வாதிகளை போல் தற்போதைய அரசியல்வாதிகள் இல்லை என்று வேதனை தெரிவித்தார். தற்போதைய நிலை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக குறிபிட்ட அவர், நிறுத்தி வைக்கப்பட்ட நிதி மசோதா, நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆஜராகும்படியும் கூறியுள்ளார். பேட்டியின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் மறைவை நினைவு கூர்ந்து, கண்ணீர் விட்டு அழுதார்.



Next Story

மேலும் செய்திகள்