மீண்டும் கர்நாடக முதல்வராகிறார் எடியூரப்பா

இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்கிறார்.
மீண்டும் கர்நாடக முதல்வராகிறார் எடியூரப்பா
x
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதியன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி அடைந்ததால், பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், 105 எம்பிக்களை கொண்ட பாஜக சார்பாக ஆட்சியமைக்க உரிமை கோரி, ஆளுநர் வஜூபாய் வாலாவை எடியூரப்பா இன்று சந்தித்தார். இதையடுத்து, முதல்வராக பதவியேற்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்ததால், இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக மாநில புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்கிறார். வருகிற 31ஆம் தேதிக்குள் கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே, 3 முறை கர்நாடக முதல்வராக இருந்துள்ள எடியூரப்பா, தற்போது 4வது முறையாக கர்நாடக முதல்வராகிறார். முதல் முறை பதவியேற்றபோது, மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி வாபஸ் பெற்றதால், 8 நாளில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு, 2008 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் வரை எடியூரப்பா முதல்வராக இருந்தார். கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பதவியேற்ற அவரது ஆட்சி 3 நாளில் கவிழ்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்