அதிமுக எம்.பி. மைத்ரேயன், மாநிலங்களவையில் இருந்து ஓய்வு

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் அதிமுக எம்பி மைத்ரேயன், நாடாளுமன்றத்தில் உருக்கமாக பேசினார்.
அதிமுக எம்.பி. மைத்ரேயன், மாநிலங்களவையில் இருந்து ஓய்வு
x
மாநிலங்களவையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர். அதிமுக உறுப்பினரான டாக்டர் மைத்ரேயனை பாராட்டி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசும்போது உடல் ஆரோக்கியத்துடன், மக்களுக்கு சேவையாற்றவும், குடும்ப நலனுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மிகச் சிறந்த புற்று நோய் மருத்துவரான மைத்ரேயன் நினைத்திருந்தால் மாதத்துக்கு 2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கலாம் எனவும் மக்கள் சேவைக்காக அவர் நாடாளுமன்றம் வந்தது பாராட்டுக்குரியது எனவும் புகழாரம் சூட்டினார். இதையடுத்து பேசிய, மைத்ரேயன், அண்ணா மற்றும் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து நா தழுதழுக்க பேசினார். இது சக உறுப்பினர்கள் இடையே உருக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்காதது வருத்தம் அளிப்பதாகவும் மைத்ரேயன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்