கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : சபாநாயகருக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

கர்நாடக சட்டசபையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 13 பேரும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : சபாநாயகருக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்
x
கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 15 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். அதனை சபாநாயகர் ஏற்காத நிலையில் அதிருபதி எம்.எல்.ஏக்கள் 13 பேர் மும்பையில் தங்கி உள்ளனர். முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது ந்ம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு கடந்த 18 ந்தேதி முதல் கர்நாடக சட்டசபையில் தொடர்ந்து  விவாதம் நடைபெற்று வருகிறது. ஆளும் கூட்டணி பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. 

இந்நிலையில் இன்று மாலை  6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.  சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க, பாஜக எம்.எல்.ஏக்ள் அனைவரும்  சொகுசு பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர். 

இதனிடையே ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்களை ஏன் தகுதி நீக்கம் செய்ய கூடாது என்று கூறி, அவர்களை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கர்நாடக சட்டசபை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு தனித்தனி, கடிதம் மூலம் பதில் அளித்துள்ள 13  அதிருப்தி எம்.எல்.ஏக்களும், தங்களுக்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தாங்கள் ஊரில் இல்லாத நிலையில், தகுதி நீக்கம் தொடர்பாக 7 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இன்று அவைக்கு வராத நிலையில், 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சபாநாயகர் உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா  என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிருப்தி எம்.எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவெடுக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்று குமாரசாமி அரசு கூறி வரும் நிலையில் , இது காலம் தாழ்த்தும் முயற்சி என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்