புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு

மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
x
நீர்மேலாண்மையை பாதுகாத்தல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த கூடாது, நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரியின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் மறைந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், மறைந்த முன்னாள் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, மறைந்த முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், மறைந்த டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்சினைகளை பற்றி விவாதிக்காமல் அரசியல் கண்ணோட்டத்தோடு  இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர். மக்கள் பிரச்சினைகளை பற்ற பேச அனுமதிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்