நம்பிக்கை வாக்கெடுப்பை முடிவு செய்வது டெல்லியாக இருக்க கூடாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

தமது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் முடிவை சபாநாயகரிடம் விட்டு விடுவதாகவும், வாக்கெடுப்பு நடத்துவதை டெல்லி முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
x
தமது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் முடிவை சபாநாயகரிடம் விட்டு விடுவதாகவும், வாக்கெடுப்பு நடத்துவதை டெல்லி முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பானவிவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இதுதொடர்பான ஆளுநரின் கடிதத்தில் இருந்து தம்மை காப்பாற்ற வேண்டும் என்றும் குமாரசாமி, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். ஆளுநர் மீது தமக்கு மரியாதை உள்ளதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வந்த இரண்டாவது கடிதம் தம்மை மிகவும் காயப்படுத்தியதாகவும் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். 10 நாட்களுக்கு முன்பு தான் மாநிலத்தில் குதிரை பேரம் நடப்பது ஆளுநருக்கு தெரிய வந்ததா என்றும் அப்போது முதலமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்